தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டம்: பொறியியல் மாணவர் தற்கொலை!

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியியல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆன்லைன் சூதாட்டம் அண்மைக் காலங்களில் பெருகி வருவதுடன், அதனால் ஏற்படும் நிதி நெருக்கடியால் பணம், நகை உள்ளிட்ட உடமைகளை இழந்து கடன் ஏற்பட்டு சமூகத்தில் ஏற்படும் அவமானம் காரணமாக தான் மட்டுமில்லாமல் தன் குடும்பத்திற்கே விஷம் குடித்து தற்கொலை செய்யக் கூடிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இந்த விளையாட்டுகளால் மாணவா்களின் கற்றல்- சமூக ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுகின்றன. எனவே, தமிழக அரசு விரைந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என அனைத்து தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் மசோதாபேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டும், ஆளுநர் இதுவரை தடை சட்டத்திற்கு  ஒப்புதல் அளிக்கவில்லை. 

இந்த நிலையில், தமிழகத்தில் ஆன்லைனில் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், கோவையில் வியாழக்கிழமை  பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டர். இந்த துயரம் சம்பவம் அடங்குவதற்குள் வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியியல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் 3 ஆம் ஆண்டு படித்து வரும் மாணவர் வினோத் குமார்(21) ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தாா். இதில் பெருமளவு பணத்தை இழந்த நிலையிலும், கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். ஒரு கட்டத்தில் மிகுந்த கடன் தொல்லைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதனால் அவா் கடும் மன உளைச்சலுடன் காணப்பட்டாா்.

இந்த நிலையில் டென்னிஸ் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்ட வினோத் குமார் வெள்ளிக்கிழமை விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலீஸார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் தடை சட்டம் மசோதா நிறைவேற்றி 60 நாள்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவில் இன்னும் ஒப்புதல் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT