முகப்பு
தமிழ்நாடு

கால்நடைகளுக்கு 90 இலட்சம் தடுப்பூசி: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, கால்நடைகளுக்கு 90 இலட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:07 AM
மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
பகிர்:


சென்னை: கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, கால்நடைகளுக்கு 90 இலட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டிற்கு, தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் (கோமாரி நோய் மற்றும் கன்றுவீச்சு நோய்-கடந்த செப்டம்பர் 2022-ல் வழங்கவேண்டிய  தடுப்பூசி மத்திய அரசால் இதுநாள் வரையில் வழங்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுத்திடவும், அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தியினைப் பராமரித்திடவும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுத்திடவும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 இலட்சம் தடுப்பூசியினை விரைந்து வழங்கிட வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா அவர்களுக்கு இன்று (17-12-2022) கடிதம் எழுதியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →