கோப்புப்படம் 
தமிழ்நாடு

திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் அரசு சொகுசுப் பேருந்து விபத்து: 20 பேர் காயம்

பெங்களூருவில் இருந்து வந்த அரசு சொகுசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

DIN

பெங்களூருவில் இருந்து திருச்சி வந்த அரசு சொகுசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி 49 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த தமிழக அரசு சொகுசுப் பேருந்து, இன்று காலை திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது. 

வளைவில் திரும்ப முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மீண்டும் அமெரிக்கா பயணம்! 2 மாதங்களில் 2வது முறை!

தீராத அனுபவங்கள்... மம்மூட்டி - 54!

வாக்காளர் பட்டியல் குளறுபடி என்ன? ராகுலிடம் தரவு கேட்கும் கர்நாடக தேர்தல் அதிகாரி

புதின் இந்தியா வருகை! டிரம்ப்புக்கு எதிராக இந்தியா - ரஷியா கூட்டு சேருமா?

SCROLL FOR NEXT