அண்ணாமலை 
தமிழ்நாடு

ரஃபேல் வாட்ச் சர்ச்சை: திமுகவினருக்கு அண்ணாமலை சவால்

ரஃபேல் வாட்ச் விவரம், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகளை விரைவில் பொதுவெளியில் வெளியிடுவேன் என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

DIN

ரஃபேல் வாட்ச் விவரம், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகளை விரைவில் பொதுவெளியில் வெளியிடுவேன் என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் ஈருக்கிறேன். 
நான் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள்..
10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள்(எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜிநாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்நமான அசையும், அசையா சொத்துகளின் விவரங்கள்.

என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன். 
அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன். 
நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்.
இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தத்துவப் பாடல்கள் 500

நீங்க சிரிங்க... அஞ்சனா ரங்கன்!

வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் வேலைநிறுத்த போராட்டம்: வெறிச்சோடிய அலுவலகம்

புரோ கபடி லீக்கின் புதிய விதிமுறைகளால் புது அனுபவம்! - பவன் ஷெராவத் பேட்டி

ரூ. 100 கோடி வசூலித்த லோகா!

SCROLL FOR NEXT