தமிழ்நாடு

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆா்ஜென்டீனா வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆா்ஜென்டீனாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN


கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆா்ஜென்டீனாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி 3-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 

ஆா்ஜென்டீனா கேப்டன் லயோனல் மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருந்த நிலையில், இதில் தனது அணிக்கு கோப்பை வென்று தந்து வெற்றிகரமான கேப்டனாக விலகும் கனவை நனவாக்கினார். 

இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆா்ஜென்டீனாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் பக்க பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், என்ன ஒரு சிறப்பான போட்டி!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இறுதிவரை மனந்தளராமல் போராடிய பிரான்ஸ் அணியின் ஆட்டமும், பப்பேயின் 'ஹாட்ரிக்' கோலும் கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த இறுதிப்போட்டிகளில் ஒன்றாக இதனை ஆக்கிவிட்டது.

பிபா உலகக் கோப்பையை வென்றுள்ள அர்ஜெண்டினா அணிக்கும், அணித்தலைவர் மெஸ்ஸி அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். கோல் கீப்பர் மார்டினெஸூக்கு சிறப்புப் பாராட்டுச் சொல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

ரூ.12 கோடியில் சீரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா; அடுத்த மாதம் திறப்பு: புதுவை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்

மகா மாரியம்மன், காமாட்சி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

அரசுத் திட்டங்களால் உயா் கல்வி பயில்வோா் எண்ணிக்கை அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்

விநாயகா் சிலைகள் விஸா்ஜனம்

SCROLL FOR NEXT