தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையம்: கிராம மக்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சு

DIN

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக 13 கிராம மக்களுடன் அமைச்சர்கள் குழு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், சர்வதேச ஒப்பந்தப்புள்ளி(டெண்டர்) கோரப்பட்டுள்ளது. 

இதனிடையே, பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு முதலாக, இதை எதிர்த்து ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட அனைத்து 13 கிராம பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது போராட்டம் 150-வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் 13 கிராமங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

இதில், கிராம மக்களின் கோரிக்கை, நிலம் கையகப்படுத்தும் பணி, இழப்பீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

வங்கதேச இளம்பெண்ணுக்கு சென்னையில் மூட்டு சீரமைப்பு

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன்?

கன்னியாகுமரி அருகே மருந்துவாழ்மலையில் தீ

நீலகிரி, கொடைக்கானல்: இதுவரை 1.11 லட்சம் வாகனங்களுக்கு இ-பாஸ்

SCROLL FOR NEXT