முகப்பு
தமிழ்நாடு

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது: சென்னை வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:09 AM
பகிர்:


தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை கடற்கரையை நெருக்கும்.

இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாள்களுக்கு மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை வியாழக்கிழமை(டிச.22) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெள்ளி, சனிக்கிழமைகளில் ( டிச.23, 24) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →