தொடர்ந்து 14-வது நாளாக முழுக் கொள்ளளவுடன் மேட்டூர் அணை!
மேட்டூர் அணை நீர்மட்டம் 14-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 14-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
புதன்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
தொடர்ந்து 14-வது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது.