கடல் போல் காணப்படும் தேக்கடி ஏரி 
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு எதிரொலி: கடல் போல் தேக்கடி ஏரி!

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்ததன் எதிரொலியாக தேக்கடி ஏரியில் தண்ணீர் கடல்போல் நிரம்பியுள்ளது.

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்ததன் எதிரொலியாக தேக்கடி ஏரியில் தண்ணீர் கடல்போல் நிரம்பியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் புதன்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 141.70 அடி உயரமாக இருந்தது, (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 7,571 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து வினாடிக்கு 454.03 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 250 கன அடியாகவும் இருந்தது. நீர் பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் மழை இல்லை, தேக்கடி ஏரியில் 0.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.

கடல் போல் ஏரி:
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 141.70 அடி உயரமாக இருந்தது, காரணம் ரூல் கர்வ் விதியின் கீழ் வரும் மார்ச் 31 வரை அணையில் நீர் மட்டும் 142 அடி நிலை நிறுத்த வேண்டும் என்பதால் தமிழக பகுதிக்கு குறைந்த அளவான தண்ணீர் (அதாவது வினாடிக்கு 250 கன அடி மட்டும்), திறந்து விடப்படுகிறது. அதன் காரணமாக தேக்கடி ஏரியில் நீர் நிறைந்து பரந்து விரிந்த கடல் போல் காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் வழக்கம் போல் 5 முறை இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT