ஓ.பன்னீர்செல்வம்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஓபிஎஸ் தரப்பு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

DIN

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட இரட்டை தலைமை பிரச்னையால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இரு அணிகளாக பிரிந்துள்ளன. கட்சியை உரிமை கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் தரப்பில் நியமிக்கப்பட்ட கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், போட்டி பொதுக்குழு நடத்துவது, ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளராக அறிவிப்பது, ஓபிஎஸ்ஸை ஒருங்கிணைப்பாளராக மீண்டும் தேர்ந்தெடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளர்களும், கட்சியின் நிர்வாகிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT