முதல்வர் மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

கரோனா அச்சுறுத்தல்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

மீண்டும் கரோனா அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

DIN

மீண்டும் கரோனா அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகின்றது. பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற ஒமைக்ரான் திரிபு வகை கரோனா குஜராத் மற்றும் ஒடிஸா மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முக்கிய ஆலோசனை நடத்திய பின்னர், முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது உள்ளிட்ட தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

இதில், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் செந்தில் குமார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அந்த கூட்டத்திற்கு பிறகு மாநில அரசுகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT