தமிழ்நாடு

அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

DIN


தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.

இந்நிலையில், இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கில் இலங்கை கடற்பகுதியை கடந்து கன்னியாகுமரி கடற்பகுதியை நோக்கி வரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான மாண்ட்ஸ் புயல் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி சென்னை - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT