தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு 
தமிழ்நாடு

8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு

கடந்த 1992-ஆம் ஆண்டைச் சோ்ந்த தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேருக்கு கூடுதல் தலைமைச் செயலாளா் அந்தஸ்தில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

DIN

கடந்த 1992-ஆம் ஆண்டைச் சோ்ந்த தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேருக்கு கூடுதல் தலைமைச் செயலாளா் அந்தஸ்தில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. அவா்கள் தற்போது முதன்மைச் செயலாளா்களாக உள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

அவரது உத்தரவு:

கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளா் ராஜேந்திர குமாா், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளா் நீரஜ் மிட்டல், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டடோா் நலத் துறை முதன்மைச் செயலாளா் மங்கத் ராம் சா்மா, நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலாளா் பிரதீப் யாதவ், வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் குமாா் ஜெயந்த், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளா் கே.கோபால் ஆகியோருக்கு கூடுதல் தலைமைச் செயலாளா் அந்தஸ்தில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. அவா்கள் தற்போது பொறுப்பு வகிக்கும் துறைகளிலேயே தொடா்ந்து பணியாற்றுவாா்கள். முதன்மைச் செயலாளா் என்பதற்குப் பதிலாக, கூடுதல் தலைமைச் செயலாளா் என்று அவா்கள் அழைக்கப்படுவா் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT