4 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை!
திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை கிராமத்தில் திருவேங்கடநாத பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை கிராமத்தில் திருவேங்கடநாத பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தில் உலக சாதனை முயற்சியாக 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
4 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் அர.சக்கரபாணி, இ.பெரியசாமி ஆகியோர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
எலைட்(அமெரிக்கா), ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாதெமி, இந்தியன் ஹெக்கார்ட்ஸ் அகாதெமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட உலக சாதனை அங்கீகரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று ஆய்வு செய்தனர்.