சிதம்பரம்: சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள வீர சக்தி ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் கீழரதவீதியில் அமைந்துள்ள வீர சக்தி ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பால், சந்தனம், பண்ணீர், பழம் என பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மகாதீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
சர்வசக்தி பீடம் தில்லை சீனு, பொ.பாலாஜிகணேஷ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது ஆலய நிர்வாகி ராஜாகுருக்கள், பாலசுப்பிரமணிய குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.