ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்சநேயர் கோயில் விழா 
தமிழ்நாடு

ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்சநேயர் கோயில் விழா

பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

DIN

தஞ்சாவூர்: பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

தஞ்சாவூர் மேலவீதி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 திருக்கோவில்களில் ஒன்றான ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்சநேயர் எனப்படும் மூலை அனுமார் திருக்கோவில் உள்ளது.

மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா மற்றும் அமாவாசை தினத்தை முன்னிட்டு உற்சவர் சுவாமிக்கு வெற்றிலை, துளசி மற்றும் எலுமிச்சை பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அமாவாசை தினத்தன்று இக்கோவிலில் 18 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

இதனால் நல்ல உடல்நலமும் நீங்காத செல்வமும் நவகிரக தோஷம் மற்றும் வாஸ்து தோஷம் விலகும் என்பது ஐதீகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT