தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை மாம்பலம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

DIN

மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை மாம்பலம் பகுதியில் நாளை மறுநாள் முதுல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. 
இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மெட்ரோ ரயில் பணிக்காக மாம்பலம் பிரதான சாலையில் தியாகராய கிராமனி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தியாகராய சிலை ஹபிபுல்லா சாலை மற்றும அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு(25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை) சோதனை அடிப்படையில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

• மாம்பலம் சாலையில் தியாகராய கிராமனி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
• மாம்பலம் பிரதான சாலையில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள் தியாகராய கிராமனி சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு தியாகராய சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம்.
• மாம்பலம் பிரதான சாலையில் கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கத்திலிருந்து தி.நகர் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள், ஹபிபுல்லா சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலை வழியாகவும் செல்லலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT