தமிழ்நாடு

ஜேஇஇ விண்ணப்பத்தில் 10 வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் விலக்கு: அன்புமணி வரவேற்பு!

ஜேஇஇ விண்ணப்பத்தில் 10 வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் தேசிய தேர்வு முகமை நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். 

DIN

ஜேஇஇ விண்ணப்பத்தில் 10 வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் தேசிய தேர்வு முகமை நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.  

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 
ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்கள்  பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து  விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய தேர்வு முகமையின்  இந்த நடவடிக்கை  நிம்மதியளிக்கிறது; வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் 2020-21 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாததால் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால், பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் குறிப்பிடப்பட வேண்டும்  என அறிவிக்கப்பட்டிருந்ததால் தமிழக மாணவர்களால் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

தமிழ்நாட்டு மாணவர்களின் இந்த சிக்கல் குறித்து நான் தான் தமிழக அரசின் கவனத்திற்கும் தேசிய தேர்வு முகமையின் கவனத்திற்கும் கொண்டு சென்றேன். நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் இதை சுட்டிக்காட்டி தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன்.

அதையேற்று தமிழ்நாடு மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் ஜேஇஇ நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் அன்புமணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT