தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் 2ம் நாள் வைகுந்த ஏகாதசி விழா: அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் இரண்டாம் நாளான சனிக்கிழமை அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார். 

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் இரண்டாம் நாளான சனிக்கிழமை அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார். 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழா கடந்த வியாழக்கிழமை இரவு தொடங்கியது. நேற்று முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் இரண்டாம் நாளான சனிக்கிழமை   மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள்.

பகல்பத்து விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை ரத்தின நீள்முடி கீரிடம், ரத்தின அபயஹஸ்தம், கபாய் சட்டை, அடுக்குப் பதக்கம், காசு மாலை, நெல்லிக்காய் மாலை உள்ளிட்ட திருவாபரணங்களுடன் அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான சனிக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து சர்வ அலங்காரத்துடன் ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளினார். 

வைகுந்த ஏகாதசி விழாவின் இரண்டாவது நாளில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் இரண்டாம் நாளான சனிக்கிழமை   சுவாமி செய்த அமைச்சர் சேகர் பாபு.

பகல்பத்தின் கடைசி நாளான ஜனவரி 1 ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறாா். அதனைத்  தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 2 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். 
 

ஸ்ரீரங்கம்  அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த  ஏகாகதசி பகல் பத்து 2ம் நாளான சனிக்கிழமை  அர்ச்சுன மண்டபத்தில்  முத்து தொப்பார கொண்டை வைர அபயஹஸ்தம் , அடுக்கு பதக்கம் நெல்லிக்காய் மாலை ,காசு மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் 
 அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்  ஸ்ரீ நம்பெருமாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT