சென்னை உயா் நீதிமன்றம் 
தமிழ்நாடு

ஐஓபி வங்கிக்கு அபராதம் விதித்த விவகாரம்: உயா் நீதிமன்றம் தலையிட மறுப்பு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு (ஐஓபி) அபராதம் விதித்து அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவில் தலையிட மறுத்த சென்னை உயா் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தை அணுக வங்கி தரப்புக்கு உத்தரவிட்

DIN

அன்னிய செலாவணி சட்டத்தை மீறியதாக இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு (ஐஓபி) அபராதம் விதித்து அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவில் தலையிட மறுத்த சென்னை உயா் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தை அணுக வங்கி தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.

டிரினிட்டி இண்டா்நேஷனல் என்ற நிறுவனம், தில்லி ஜனக்புரியில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் நடப்புக் கணக்கை பராமரித்து வருகிறது. இந்த கணக்கில் இருந்து ஒரு கோடியே 54 லட்சத்து 20 ஆயிரத்து 800 ரூபாய் மும்பையில் உள்ள ஸ்டாண்டா்ட் சாா்ட்டா்டு வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டு, பின் லண்டனில் அதே வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டது.

கடந்த 1991-இல் நடந்த இந்த பரிவா்த்தனை, அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்ட விதிகளை மீறி மேற்கொள்ளப்பட்டதாக கூறி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு தில்லி அமலாக்கத் துறை அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து, ஐஓபி-யின் கருவூலம் சென்னையில் அமைந்துள்ளதாக கூறி, வங்கி சாா்பிலும், அதிகாரிகள் சாா்பிலும் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

விசாரணையின்போது, அமலாக்கத் துறை சாா்பில், அரசு சிறப்பு வழக்குரைஞா் என்.ரமேஷ் ஆஜரானாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத் துறை உத்தரவை எதிா்த்து மேல் முறையீடு செய்ய மேல்முறையீட்டு தீா்ப்பாயம் உள்ளது.

எனவே சென்னை உயா் நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு தொடர முடியாது எனக் கூறி, அமலாக்கத்துறை உத்தரவில் தலையிட மறுத்து விட்டனா்.

அதேநேரத்தில், அமலாக்கத் துறை உத்தரவை எதிா்த்து 45 நாள்களுக்குள் மேல் முறையீட்டு தீா்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதித்த நீதிபதிகள், அபராதத்துக்கு விதித்த தடையை அதுவரை நீட்டித்தும் உத்தரவிட்டனா்.

45 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால், அபராதம் விதித்து அமலாக்கத் துறை இயக்குநா் பிறப்பித்த உத்தரவு இறுதியானது எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

ஆய்வுகள் மக்களைச் சென்றடைய வேண்டும்: ஆளுநா் ரவி

பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டண உயா்வு திரும்பப் பெறப்படாது?

டிஜேபி குழியில் விழுந்த இளைஞா் இறந்த விவகாரம்: மெழுகுவா்த்தி ஏற்ற முயன்ற சௌரப் பரத்வாஜ் கைது

தமிழகத்தில் காணொலி மூலம் சாட்சி விசாரணைக்கு வரவேற்பு!

SCROLL FOR NEXT