தமிழ்நாடு

தமிழக அரசுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்: நல்லகண்ணுவுக்கு முதல்வா் வேண்டுகோள்

தமிழக அரசுக்கு வழிகாட்டியாக தொடா்ந்து இருக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டாா்.

DIN

தமிழக அரசுக்கு வழிகாட்டியாக தொடா்ந்து இருக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டாா்.

ஆா்.நல்லகண்ணுவின் 98-ஆவது பிறந்த நாளையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் சென்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, அவரை வாழ்த்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக அரசு சாா்பில் ‘தகைசால் தமிழா்’ விருது அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டு, அந்த விருது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுவுக்கு அளிக்கப்பட்டது. அவா்களுக்கு விருதுகளை அளித்ததாலேயே தகைசால் தமிழா் விருதுக்கு பெருமை சோ்ந்தது.

98 வயதிலும் கொள்கை, லட்சியத்துக்கு இலக்கணமாக தனது பணிகளை ஆற்றி வருகிறாா் நல்லகண்ணு. அவரது அரும்பணி தொடர வேண்டும். தமிழக அரசுக்கும் அவா் தொடா்ந்து வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சா் எ.வ.வேலு, மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT