தமிழ்நாடு

டிசம்பர் 30 முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கப்படும்!

DIN

தமிழகத்தில் டிசம்பர் 30-ம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என்று அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி கூட்டாக அறிவித்துள்ளனர். 

பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்வது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சக்கரபாணி, தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரிசி, சா்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

இவை நியாய விலைக் கடைகள் மூலமாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நியாய விலைக் கடைகளுக்கு பொது மக்கள் நெரிசல் இல்லாமல் வந்து செல்ல வசதியாக, டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

அதன்படி, டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 2,3,4 ஆகிய தேதிகளில் பொங்கல் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வேறு சில பொருள்கள் வழங்கவேண்டும் என்ற கோரிகை குறித்து முதல்வர் பரிசீலனை செய்து முடிவு செய்வார்.

மாற்றுத்திறனாளிகள்,வயதானவர்கள்,ரேஷன் கடைக்கு நேரில் வர முடியாதவர்கள், கைரேகை வைக்க முடியாதவர்கள்,தங்களுக்கு மாற்றாக யார் ரேஷன் கடைக்கு செல்கிறார்கள் என்ற தகவலை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்துவிட்டால் மாற்று நபரிடம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். 

பொங்கல் பண்டிகைக்கு முன்பு வாங்க முடியாதவர்கள் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வாங்குவதற்கும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இந்திய உணவு கழகத்தின் மூலம் ஆந்திரம், தெலங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் கொள்முதல் செய்யப்படுகிறதுமத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய அரிசியில் பற்றாக்குறை இருப்பதால் கூடுதலாக கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற வீட்டிலிருந்து பைகளைக் கொண்டுவர வேண்டும் என்றும் இலவச பை வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். 

நாளொன்றுக்கு நகர்ப் பகுதியில் 300 அட்டைகளுக்கும், ஊரக பகுதியில் 200 அட்டைகளுக்கும் டோக்கன் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், டோக்கன் விநியோகம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், டோக்கன் வழங்குவதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறியுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT