சொத்து வரி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகளை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த மனுதாரரகளுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்தவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்: விதிமீறுபவர்கள் மீது நடவடிக்கை; காவல்துறை ஆணையர்!
சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சி இணையதளங்களை மேம்படுத்தவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.