தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது!

DIN

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 142 அடியை எட்டியது. அணை பொறியாளர், 3 -வது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை செவ்வாய்க்கிழமை விடுத்தார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 142 அடி உயரத்தை எட்டியது. (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 7,666 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 1,687.50 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கை

ரூல் கர்வ் நடைமுறையின்படி அணையில் நீர்மட்டம் 142 அடி வரை மார்ச் 31 வரை தேக்கி கொள்ளலாம். 142 அடிக்கு மேல் நீர் மட்டம் உயருமானால் அணையின் மதகுகளை திறந்து உபரி நீரை வெளியேற்ற வேண்டும். அதன் பேரில் 142 அடி நீர் மட்டம் தற்போது எட்டியுள்ளது. நீர் வரத்து அணைக்குள் அதிக அளவில் வந்துகொண்டிருக்கிறது. அணையின் கீழ் பகுதியில் கரையோரம் வசிக்கும், கேரள மாநில இடுக்கி மாவட்டத்தில் உள்ள  வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, சப்பாத்து உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு  உபரிநீர் திறப்பதற்காக மூன்றாம் மற்றும்  இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. 

இறுதி கட்ட எச்சரிக்கையை பெரியாறு அணையின் தேக்கடி நான்காவது பிரிவு அலுவலகத்தைத் சேர்ந்த உதவி பொறியாளர் பி.ராஜகோபால் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விடுத்தார்.

142 அடி உயரத்தை எட்டிய பின் அணைக்குள் நீர் வரத்து அதிகரிக்கும் நேரத்தில், அணையில் ரூல்கர்வ் விதிப்படி நீர்மட்டத்தை  உயரவிடாமல், அருகே உள்ள மதகுகளை திறந்து, உபரி நீர் கேரள பகுதியில் உள்ள இடுக்கி அணைக்கு செல்லுமாறு திறந்து விடப்படும் என்று தமிழக பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT