புத்தாண்டு தினத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கவிருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம்.
இந்நிலையில் 2023ஆம் ஆண்டு புத்தாண்டில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க உள்ளதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்திற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வருகை தர உள்ளார். காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.