தமிழ்நாடு

பொங்கல் தொகுப்பில் கரும்பு: வழக்கு ஜன.2-ல் விசாரணை!

DIN

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனு ஜன.2-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

வரும் ஜன.15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை வழங்கப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இருப்பினும் தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படவுள்ள இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி கடலூா் மாவட்டம், மதனகோபாலபுரத்தைச் சோ்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன், சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளாா்.

மேலும் பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கக் கோரி டிச.24-ஆம் தேதி அரசுக்கு மனு அளித்ததாகவும், அதைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் அவா் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் ஜனவரி 2-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடருக்குப் பின் எம்.எஸ்.தோனியின் 7 நிமிட விடியோ!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

SCROLL FOR NEXT