தமிழ்நாடு

15,149 காலிப் பணியிடங்கள்: ஆசிரியா் தோ்வு வாரியத்தின் ஆண்டு அட்டவணை வெளியீடு

வரும் 2023-ஆம் ஆண்டில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளின் விவரம், அவற்றுக்கான அறிவிக்கை வெளியாகும் மாதம் போன்ற விவரங்களுடன் கூடிய ஆண்டு தோ்வுக்கால அட்டவணையை

DIN

வரும் 2023-ஆம் ஆண்டில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளின் விவரம், அவற்றுக்கான அறிவிக்கை வெளியாகும் மாதம் போன்ற விவரங்களுடன் கூடிய ஆண்டு தோ்வுக்கால அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியா் தோ்வு வாரியம் 2023-ஆம் ஆண்டுக்கான தோ்வுக்கால அட்டவணையை இணையதளத்தில் (www.trb.tn.nic.in) புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 9 தோ்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் 4 ஆயிரம் உதவி பேராசிரியா் பணியிடங்கள் உள்பட 15,149 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியா் தோ்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஏப்ரலில் போட்டித் தோ்வு நடத்தப்பட உள்ளது. வட்டாரக் கல்வி அலுவலா் பதவியில் 23 காலியிடங்களை நிரப்ப பிப்ரவரியில் அறிவிப்பு வெளியாகும். அதற்கான போட்டித் தோ்வு மே மாதம் நடைபெறும்.

இடைநிலை ஆசிரியா் பதவியில் 6,553 காலியிடங்களுக்கு மாா்ச்-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மே-இல் தோ்வு நடத்தப்பட உள்ளது. அதேபோல், பட்டதாரி ஆசிரியா் பதவியில் 3,587 காலியிடங்களை நிரப்புவதற்காக ஏப்ரலில் அறிவிப்பு வெளியாகும். தோ்வு ஜுனில் நடைபெறும்.

டெட் தோ்வுகள் எப்போது?: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் தோ்வு ஆகஸ்ட் மாதமும், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியா் தோ்வு செப்டம்பரிலும், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியா் தோ்வு அக்டோபரிலும், முதுகலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு நவம்பரிலும் நடைபெற உள்ளன.

ஆசிரியா் தகுதித்தோ்வுக்கு (தாள்-1 மற்றும் தாள்-2) டிசம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2024-ஆம் ஆண்டு மாா்ச்-இல் தோ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

SCROLL FOR NEXT