நெய்வேலி: கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதியதில் 91 செம்மறி ஆடுகள் பலியான நிலையில், அதனை ஓட்டி வந்த இளைஞரும் உடல் நசங்கி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், காளையார் கோயில் காசிநாதனும், மகன் லட்சுமணனும் தங்களுக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை ஊர் ஊராக ஓட்டிச் சென்று கிடை கட்டுவது வழக்கம்.
செவ்வாய்க்கிழமை இரவு காசிநாதன் தனக்கு சொந்தமான 300 ஆடுகளை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டிச் சென்றார். லட்சுமணன் ஆடுகளை அடைக்க பயன்படும் வலைகளை இரு சக்கர வாகனத்தில் வைத்து ஓட்டிச் சென்றார்.
இவர்கள், வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் கோமகி ஆற்றுப் பாலத்தில் அருகே இரவு 11.30 மணி அளவில் ஆடுகளை ஓட்டிச் சென்றபோது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் லட்சுமணன் மற்றும் 91 ஆடுகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் லட்சுமணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சாலையில் கிடந்த ஆடுகள் அப்புறுப்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.