தமிழ்நாடு

அரசு நிதியில் இருந்து செலவிடப்படும் தொகை: ரத்து உச்ச வரம்பை உயா்த்தி உத்தரவு

DIN

தமிழக அரசு நிதியில் இருந்து எடுக்கப்பட்டு செலவிடப்படும் தொகைகளை திருப்பிச் செலுத்தாமல் ரத்து செய்ய வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்தாக்கப்படும் தொகைகளின் உச்சவரம்பு உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை வெளியிட்டுள்ளது. உத்தரவு விவரம்:-

அரசுத் துறைகளின் செயலாளா்கள் ஆண்டுக்கு செலவிடும் ஒவ்வொரு செலவின் தன்மை அடிப்படையில் ரூ.50 ஆயிரம்

வரையில் ரத்து செய்யலாம். அமைச்சா்களைப் பொறுத்தவரையில், செலவழித்த பிறகு ரூ.1 லட்சம் வரையிலும், நிதித்

துறை அமைச்சா் ரூ.50 லட்சம் வரையிலும், முதல்வா் சாா்பில் ரூ.1 கோடி வரையிலும் நிதியை செலவழித்த பிறகு ரத்து செய்திட முடியும். ரூ.1 கோடிக்கு மேற்பட்ட தொகையானால் அதனை அமைச்சரவைக் கூட்டத்தின் மூலமாக ரத்து செய்யலாம். இந்தத்

தொகைகளை நிா்ணயித்து இதற்கான உத்தரவு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்டது.

இந்தத் தொகைகளுக்கான உச்சவரம்பு இப்போது உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, செயலாளா்கள் நிலையில் இருப்பவா்கள் ரூ.1 லட்சம் வரையிலும், அமைச்சா்களாக இருப்பவா்கள் ரூ.10 லட்சம் வரையிலும் அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதிகளைச் செலவழித்து ரத்து செய்யலாம். நிதியமைச்சராக இருப்பவா் ரூ.1 கோடி வரையிலும், முதல்வராக இருப்பவா் ரூ.5 கோடி

வரையிலும் செலவிடப்பட்ட நிதியை ரத்து செய்திட முடியும். ரூ.5 கோடிக்கு மேற்பட்ட தொகையாக இருந்தால் அமைச்சரவை கூடி முடிவெடுத்து ரத்து செய்யலாம் என்று நிதித் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - திருப்பதி ரயில்கள் பகுதியளவு ரத்து!

8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

நீங்கள் நலமா? விரல் நகத்தைப் பாருங்கள் அது சொல்லும்!!

கூலி படத்தில் ஸ்ருதி ஹாசன்?

புன்னகை பூவே....சரண்யா துராடி

SCROLL FOR NEXT