முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் 23 ஆவது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:13 AM
பகிர்:


மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 23 ஆவது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது. 

வியாழக்கிழமை காலை 23 ஆவது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. 

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. 

அணைக்கு வினாடிக்கு 5,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →