தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத்துக்கு 39-வது பலி: தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு  கடந்த 16 மாதங்களில் நிகழ்ந்துள்ள 39 ஆவது நபர் பலியாகியுள்ள நிலையில், தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்

DIN



தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு  கடந்த 16 மாதங்களில் நிகழ்ந்துள்ள 39 ஆவது நபர் பலியாகியுள்ள நிலையில், தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: 

திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற பட்டதாரி இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு  அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு  கடந்த 16 மாதங்களில் நிகழ்ந்துள்ள 39-ஆவது தற்கொலை இதுவாகும்.  ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் காலாவதியான பிறகு  சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாமக நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் 73 நாள்களாகியும் அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதம் செய்வது நியாயம் அல்ல.

ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலைகளும், குடும்பச் சீரழிவுகளும் தொடர்கதையாகி வருகின்றன. சூழலின் அவசரத் தன்மையை உணர்ந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று  ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

“சிறுவயதிலேயே தமிழ் கற்றிருக்கலாம் என விரும்புகிறேன்!” பிரதமர் மோடி உரை! | Coimbatore

சபரிமலை தரிசனம்: 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங்!

வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 3% சரிவு!

தமிழக அரசு அனுப்பிய மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைகள்!

SCROLL FOR NEXT