தமிழ்நாடு

விமர்சனங்களுக்கு செயலால் பதிலடி கொடுப்பார் உதயநிதி : முதல்வர் மு.க. ஸ்டாலின்

DIN

திருச்சி: அமைச்சர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் புதியவராக இருந்தாலும், தமிழகத்திற்கு அவர் பரிச்சயமான முகம் என்றும், விமர்சனங்களுக்கு செயல்திறன் மூலம் பதில் அளிப்பார் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இது தொடர்பாக பேசிய அவர், இப்போது அமைச்சராகப் பதவியேற்றிருந்தாலும், அவர் உங்களுக்கு புதியவர் அல்ல. அவர் அமைச்சராக பதவியேற்ற போது விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு உதயநிதி தனது செயலின் மூலம் பதிலடி கொடுப்பார் என்று நான் நம்புகிறேன் என்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் தெரிவித்தார்.

ஸ்டாலினின் மகனும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப் பேரனுமான உதயநிதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றார்.

தாம் சட்டமன்ற உறுப்பினரானபோது, தனது செயல்பாட்டின் மூலம் தம்மை மதிப்பிடுமாறு மக்களிடம் உதயநிதி கேட்டுக் கொண்டதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெறும் வகையில் அவர் நடந்து கொள்வார் என்றார்.

உதயநிதிக்கு வறுமை ஒழிப்பு, சிறப்புத் திட்ட அமலாக்கம், பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட பல பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனக்கு அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அவர் தனது திறமையை நிரூபித்து,  துறைகளை மேம்படுத்துவார் என உறுதியாக நம்புகிறேன் என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT