தமிழ்நாடு

பூண்டி நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டியது!

DIN

திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி ஏரி மழைநீர் வரத்தால், முழுக் கொள்ளளவை எட்டியதால் விநாடிக்கு 200 கன அடியிலிருந்து 500 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரியாகும். இந்த ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியும், 350 அடி உயரமும் கொண்டதாகும். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 35 அடி உயரமும் 3,231 மில்லியன் கன அடி நீருடன் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. 

மேலும் பூண்டி ஏரிக்கு மழை நீர், வரத்துக் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர், கேசாவரம் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு அதன் மூலம் பெறப்படும் 700 கன அடி நீர், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நதி 500 கன அடி நீர் என மொத்தம் 1200 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஏற்கனவே 200 கன அடி வீதம் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்ட நிலையில்,  தற்போது ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால் 500 அடியாக உயர்த்தி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் புழல்  மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக 450 கன அடியும், சென்னை குடிநீர் வாரியத்திற்காக பேபி கால்வாய் வழியாக 38 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

அதேபோல் புழல் ஏரியில் 2918 மில்லியன் கன அடி நீரும், சோழவரம் ஏரியில் 831 கன அடியும் அதேபோல் ‌கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் 488 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT