கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் புத்தாண்டு மற்றும் அன்னை அடைக்கலமாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உலக புகழ்பெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் உலகப் புகழ்பெற்ற தமிழ் நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா.சின்னத்துரை ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை (ஜன.2) நடைபெற உள்ளது.
அதற்கான முன்னேற்படுகளை விழா குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளுர் மக்கள் செய்துவருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை கோட்டாச்சியர் முருகேசன், வட்டாட்டச்சியர் சு. ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தெரிய வருகிறது. வாடிவாசலுக்கான முன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு காளைகள் செல்லும் இருபுறமும் தட்டி வைத்து அடைக்கும் வேலையும், பார்வையாளர்கள் பார்ப்பதற்கான மேடையும் அமைக்கும் பணியில் விழா குழுவினர் மும்முரமாக செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.