தமிழ்நாடு

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

DIN

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

தமிழகத்தில், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது. இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், குடும்பத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் காகர்லா உஷாவுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்லியடைந்த நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் இந்த பேச்சுவார்தையும் தோல்வியில் முடிவடைந்தது. 

அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை என்றும் முதல்வரை சந்திக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

இந்த நாள் இனிய நாள்!

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT