முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 16 ஆயிரம் பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 16,096 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:17 AM
பகிர்:


தமிழ்நாட்டில் புதிதாக 16,096 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா நிலவரம் குறித்த செய்திக் குறிப்பை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 1,22,120 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 16,093 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 33,61,316 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 35 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 25,592 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Advertisement

இதுவரை மொத்தம் 31,35,118 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37,599 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 1,88,599 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 1,308
சென்னை - 2,348
கோவை - 1,897
திருப்பூர் - 1,297

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments