தமிழ்நாடு

தேமுதிகவின் இரண்டாம் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தேமுதிக சார்பில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவானது, ஒரேகட்டமாக பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 4 ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சியில் உள்ள 50 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாத்தில் கார் பதிவெண்ணுக்கு ரூ.25 லட்சம்!

குவாலிஃபையர் 1: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை! | செய்திகள்: சிலவரிகளில் | 21.05.2024

கேஜிஎஃப் தங்கத்தில் ஆபரணமா? ஸ்ரீநிதி ஷெட்டி!

தங்கத் தாமரை மகளே...!

SCROLL FOR NEXT