தமிழ்நாடு

'காவலர் தேர்வில் இனி தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம்'

DIN

காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்தால் பட்டுமே காவலர் பணிக்காக எழுதுத்தேர்வு கணக்கில் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர், காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வுகளுக்கு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. 

அதன்படி காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் மதிப்பெண்களாவது எடுக்க வேண்டும். அப்போதுதான் காவலர் பணிக்காக எழுதுத்தேர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

இதனால் தமிழ்நாடு காவலர் தேர்வில் இனிமேல் இரண்டு தேர்வுகள் நடைபெறும். அதில் தேர்வு 1-ல், தமிழ் பாடத்தில் 80 வினாக்கள் கேட்கப்படும். குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.  

தேர்வு 2-ல் வழக்கம்போல் நடைபெறும் தேர்வு. பொது அறிவு 50 வினாக்களும், உளவியல் கேள்விகள் 30 கேட்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர்களுக்குத் தனியாக நடத்தப்படும் இந்த தமிழ்த் தகுதி தேர்வு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT