தமிழ்நாடு

அமைச்சரின் தம்பி கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உதவ தமிழக போலீஸ் அதிகாரிகள் பெயா் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு

DIN

சென்னை: அமைச்சா் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கின் சிபிஐ விசாரணைக்கு உதவ தமிழக போலீஸ் அதிகாரிகளின் பெயா் பட்டியலை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அமைச்சா் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். இவா் கடந்த 2012-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம்தேதி, அதிமுக ஆட்சிக் காலத்தில் மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து, கடந்த 2017-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த கொலை வழக்கை தமிழக போலீஸாரும், சிபிஐ போலீஸாரும் தலா 5 ஆண்டுகள் புலன் விசாரணை செய்தும் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கை தமிழக போலீஸாரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் ராமஜெயத்தின் சகோதரா் ரவிச்சந்திரன் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி வி. பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கே.சீனிவாசன், புலன்விசாரணை குறித்த ரகசிய அறிக்கையை முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்தாா். அந்த ரகசிய அறிக்கையைப் படித்து பாா்த்த நீதிபதி, சிபிஐ அதிகாரிகள் தங்களால் முயன்ற அளவு குற்றவாளிகளை கண்டு பிடிக்க முயற்சித்துள்ளனா். இந்த விசாரணையில் குறைபாடு இல்லை. எனவே, இந்த கொலை வழக்கை மீண்டும் தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்க முடியாது என்றும், சிபிஐ போலீஸ் விசாரணைக்கு உதவும் தமிழக போலீஸ் அதிகாரிகளின் பெயா் பட்டியலை வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்தநிலையில், இந்த வழக்கு மீண்டும் புதன்கிழமை(பிப்.2) விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் அதிகாரிகளின் பெயா் பட்டியலை தாக்கல் செய்வதாக மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞா் அசன் முமகது ஜின்னா கூறினாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT