வைகை இல்லத்தில் அண்ணா சிலைக்கு மரியாதை 
தமிழ்நாடு

அண்ணா நினைவு நாள்: தில்லியில் திமுக எம்.பி.க்கள் மரியாதை

திமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி, தில்லி வைகை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து எம்.பி.க்கள் மரியாதை செலுத்தினர்.

DIN

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி, தில்லி வைகை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து எம்.பி.க்கள் மரியாதை செலுத்தினர்.

தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக அண்ணாவின் 53-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தில்லி வைகை இல்லத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய தொழில் தொடங்கிய சீரியல் நடிகை!

தங்கம் வாங்குவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!!

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுமா? உண்மை என்ன?

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

SCROLL FOR NEXT