அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

திமுகவின் 9-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் ஒன்பதாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் ஒன்பதாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவானது, ஒரேகட்டமாக பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 4 ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், திமுகவின் ஒன்பதாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில், மதுரை, கோவை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவோர் பட்டியல் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக எட்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள திமுக, சென்னை மாநகராட்சிக்கான வேட்பாளர்கள் பட்டியலை இதுவரை வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிரந்தர ஒளி... கேப்ரியல்லா!

டிஜிட்டல் அரெஸ்ட்: சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த 3 குவாஹாட்டி பல்கலை. பேராசிரியா்கள்!

நேபாளத்தில் நிலச்சரிவு: உயிரிழப்பு 50-ஐ கடந்தது!

தமிழ்நாட்டின் சைபர் குற்றங்களுடன் தொடர்பு? தில்லியில் 24 சிம் பாக்ஸ்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT