முகப்பு
தமிழ்நாடு

மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துடன் தமிழக அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

தில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

தில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்தார். 
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு அணை தொடா்பான வழக்கில் அணை நிலவர அறிக்கையை மத்திய நீா்வள ஆணையத்தின் துணை இயக்குநா் ராகேஷ் குமாா் கௌதம் வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 
அதில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக புதிய ஆய்வு செய்ய வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் தில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்தார். முன்னதாக முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பில் மறுஆய்வு செய்ய அவசியமில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →