ஆளுநரை திரும்பப் பெறுக: மக்களவையில் தமிழக எம்பிக்கள் முழக்கம் 
தமிழ்நாடு

ஆளுநரை திரும்பப் பெறுக: மக்களவையில் தமிழக எம்பிக்கள் முழக்கம்

நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்ப அனுப்பியதைத் தொடர்ந்து ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறித்தி தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

DIN

நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்ப அனுப்பியதைத் தொடர்ந்து ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறித்தி தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியிறுத்தி வந்தனர். அதனைத் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.

பின் அந்த மசோதா ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது ஆளுநர் ஆர்.என் ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசிற்கே திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் வியாழக்கிழமை முழக்கங்களை எழுப்பினர். தமிழக அரசால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனால் அவையில் சிறிதுநேரம் அமளி நிலவியது.

தொடர்ந்து திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகை திருட்டு: பணிப்பெண் கைது

பெருந்துறையில் ரூ.5.08 கோடிக்கு கொப்பரை ஏலம்

அந்தியூரில் ரூ.23.50 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

வெள்ளக்கோவிலில் ரூ.60 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT