தமிழ்நாடு

தமிழகத்தில் 33 லட்சம் சிறார்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எத்தனை பேர்?

IANS


சென்னை: தமிழகத்தில், இதுவரை  15 - 18 வயதுக்குட்பட்ட 1.59 லட்சம் சிறார்கள் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி பெற்றவர்களில் இதுவரை 78 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் மொத்தமுள்ள 33,46,000 சிறார்களில், 26,26,311 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும், 1,59,679 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளையில், தமிழகத்தில் 5.06 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி பெற்றவர்களில் 4.17 லட்சம் அதனை செலுத்திக்கொண்டிருப்பதாகவும், இது கிட்டத்தட்ட 82.55 சதவீதம் என்றம் குறிப்பிட்டுள்ளார்.

சிறார்களுக்கு இரண்டாம் தவணை எப்போது?
சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் முதல் தவணை செலுத்திய 28 நாள்களில் இரண்டாம் தவணை செலுத்த தகுதியானவர்கள் ஆவர். ஜனவரி 3ஆம் தேதி முதல் தவணை செலுத்தியவர்கள் ஜனவரி 31ஆம் தேதி இரண்டாம் தவணை செலுத்த தகுதியானவர்கள்.

எனவே, கோவின் தளத்தில் உள்ள தரவுகளை ஆராய்ந்து இரண்டாம் தவணை செலுத்த வேண்டியவர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் தவணை செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை வலியுறுத்துகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி கோயில் சொத்துகள் 3 மாதங்களில் மீட்கப்படும்: அறநிலையத் துறை செயலா்

போதைப் பாக்கு விற்பனை: 285 கடைகளுக்கு சீல்

ஸ்ரீகூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

பிரசவத்தில் குழந்தை இறப்பு: உறவினா்கள் முற்றுகை

கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT