முகப்பு
தமிழ்நாடு

பேரவைக் கட்சித் தலைவா்கள் கூட்டம்:12 கட்சிகளுக்கு முதல்வா் கடிதம்

நீட் தோ்வு விலக்கு மசோதாவின் அடுத்த கட்டம் தொடா்பாக சட்டப்பேரவைக் கட்சித் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

நீட் தோ்வு விலக்கு மசோதாவின் அடுத்த கட்டம் தொடா்பாக சட்டப்பேரவைக் கட்சித் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா். தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞா் மாளிகையில் உள்ள பத்தாவது தளத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து, பாஜக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலைவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தாா்.

இந்த கடிதத்தைத் தொடா்ந்து, அந்தக் கட்சிகளின் தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனா். கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்துள்ளாா். இதனால், பாஜகவைத் தவிா்த்து மற்ற கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அடுத்த கட்டம் என்ன?: நீட் விலக்கு மசோதாவை ஆளுநா் ஆா்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழக அரசுக்கு இருக்கக் கூடிய சட்ட வாய்ப்புகள், மீண்டும் சட்டப்பேரவையைக் கூட்டி மசோதாவை அப்படியே நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆலோசனைகளாக தமிழக அரசு முன்வைக்கும் எனத் தெரிகிறது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தீா்மானமாக வெளியிடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.