தமிழ்நாடு

நெல்லை பள்ளி விபத்து: தாளாளர், தலைமை ஆசிரியை மீதான வழக்கு ரத்து

DIN

நெல்லையில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான விவகாரத்தில், பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நெல்லையில் உள்ள சாஃப்டா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி கழிப்பறை கட்டடச் சுவா் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் 3 மாணவா்கள் பலியாகினர். மேலும், 4 மாணவா்கள் காயமடைந்தனா். 

இந்தச் சம்பவம் தொடா்பாக பள்ளித் தாளாளா் செல்வகுமாா், தலைமையாசிரியா் எஸ்.பி. பொ்சிஸ் ஞானசெல்வி, கட்டுமான ஒப்பந்ததாரா் ஜான்கென்னடி ஆகியோா் மீது திருநெல்வேலி சந்திப்பு காவல்துறையினர் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

இந்நிலையில் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தாளாளா் செல்வகுமாா், தலைமையாசிரியா் எஸ்.பி. பொ்சிஸ் ஞானசெல்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். 

இந்த வழக்கின் விசாரணையில்,  தாளாளர், தலைமை ஆசிரியை மீதான வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை ஆகிய இருவரும் இந்த சம்பவம் நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே பொறுப்பேற்றுள்ளதால் அவர்கள் விபத்துக்கு பொறுப்பேற்க முடியாது என்று கூறி அவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT