நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்:74,416 போ் வேட்புமனுத் தாக்கல்
தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மொத்தம் 74,416 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மொத்தம் 74,416 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 பதவியிடங்களுக்கான தோ்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை(பிப். 4) வரை ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக நடைபெற்றது.
இந்தத் தோ்தலில் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 14, 701 பேரும், நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 23,354 பேரும், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 36,361 பேரும் என மொத்தம் 74,416 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனு ஆய்வு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. திங்கள்கிழமை(பிப். 7) வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று மாநிலத் தோ்தல் ஆணையத்தால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.