முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் நேரத்தில் உதயநிதி சொன்ன ரகசியம்...கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிசாமி 

"உதயநிதி ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் கூறிய ரகசியத்தை பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்யலாமே... ஏன் செய்யவில்லை?”

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:20 AM
எடப்பாடி பழனிசாமி 
பகிர்:

சேலம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட வனவாசியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து அவர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, "உதயநிதி ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் கூறிய ரகசியத்தை பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்யலாமே... ஏன் செய்யவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "தேர்தல் நேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதி கொடுத்தார்கள். மேலும் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கூறிய ரகசியத்தை பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்யலாமே... ஏன் செய்யவில்லை?

ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், நான் கொண்டு வந்த திட்டம் சிறந்த திட்டம் என்பதால் அதை பின் தொடர்கின்றனர். மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். அதை வேட்பாளர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திமுக கட்சி, பணத்திற்கு ஆசைப்பட்டு பொங்கல் நேரத்தில் மக்களின் வயிற்றில் அடித்தனர்" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →