தமிழ்நாடு

தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

DIN

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 
அதன்படி, இன்று 6,120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அத்துறை வெளியிட்ட தகவல்படி, இன்று மட்டும் சென்னையில் 972 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 911 பேரும், செங்கல்பட்டில் 531 பேரும், திருப்பூரில் 473 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

மற்றொருபுறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 23,144 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு இன்று வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 32 லட்சத்து 51,295-ஆக அதிகரித்துள்ளது. 
தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 21,828 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 26 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,759-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

கனவில் வாழ்பவள்... பரமேஸ்வரி!

அழகின் சம்மேளனம்... சமந்தா!

SCROLL FOR NEXT