தஞ்சாவூர் அருகே தொழிலாளி கொலை: தாய், அண்ணனிடம் விசாரணை
தஞ்சாவூர் அருகே கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக தாய், அண்ணனிடம் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை காலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக தாய், அண்ணனிடம் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை காலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து மகன் வைரமணி (36) கூலித் தொழிலாளி. திருமணமாகாத இவர் நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்று தாயிடம் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் வைரமணி வீட்டின் பின்புறம் செவ்வாய்க்கிழமை காலை தலை, வாயில் கட்டையால் தாக்கப்பட்ட காயங்களுடன் கொலை உயிரிழந்து கிடந்தார். தகவலறிந்த தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றினர்.
இச்சம்பவம் குடும்ப பிரச்னை காரணமாக நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வைரமணியின் அண்ணன் முத்தமிழ் ராஜா (40), தாய் மாரியம்மாளிடம் (60) காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.